சனி, 9 அக்டோபர், 2010

சாண எரிவாயு

இந்த உலகத்தில் உருவான அனைத்தும் இந்த உலகத்திலேயேதான் இருக்க முடியும். அவற்றை மனிதன் தன் அறிவின் மூலமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சாண எரிவாயு.நாம் ஒதுக்கும் வைக்கோல் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் மாடுகள் தங்கள் சாணத்தையும் நமக்கு பயனுள்ளதாக்குகின்றன.2m3 இடமும் 3,4 மாடுகளும்,ஆரம்ப முதலீடும் இருந்தால் சமைப்பதற்க்கான எரிபொருள் தயார்.சாண எரிவாயு தயாரிப்பதற்க்கான கலன் தற்போது சின்டெக்ஸ் போன்ற அமைப்பில் வந்து விட்டது.இதில் சாணத்தோடு வீட்டில் மீந்து போன கழிவுகளும் பயன் படுத்தலாம். சாண எரிவாயுக்கலன் அமைப்பவர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் மானியம் தருகின்றது. 2m3 கொள்ளளவுள்ள கலனை அமைப்பதற்கு 8000 ரூபாய் மானியம் தரப்படுகிறது. ஆர்வமும் வசதியும் உள்ளவர்கள் சாண எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்வதோடு எரிபொருளுக்கு ஆகின்ற செலவையும் கட்டுப்படுத்தலாம். கலனிலிருந்து வெளியாகின்ற சாணத்தையும் எருவாக பயன்படுத்தலாம்.